Sunday, May 12, 2013


தாய்
 
உயிர் கொடுத்தாய்
எனை வ‌ள‌ர்த்தாய்
நித‌ம் நினைத்தாய்
என் நிழ‌ல் ர‌சித்தாய்
அம்மா... என் அம்மா...
 
க‌ருவ‌றையில்
இட‌ம் அளித்தாய்
என் கை பிடித்து
ந‌டை வ‌குத்தாய்
அம்மா... என் அம்மா...

வ‌ள‌ர்ந்து வ‌ரும் வேளையிலே
வ‌ர‌ங்க‌ளையே வ‌ழ‌ங்கி வந்தாய்
வ‌ள‌ர்ந்த‌ பின்பும் வாழ்க்கையிலே
வ‌ச‌ந்த‌த்தையே வ‌ர‌வ‌ழைத்தாய்
அம்மா... என் அம்மா...

என் காய‌ங்க‌ளின் வேத‌னையில்
மூலிகையாய் நீ இருந்தாய்
நான் முன்னேறும் வேளைக‌ளில்
பின்புல‌மாய் நீ அமைந்தாய்
அம்மா... என் அம்மா...

பட‌ப‌ட‌க்கும் சூழ‌லிலே
சோர்வ‌க‌ற்றி சாந்தம் செய்தாய்
ப‌ண்ப‌ட்ட ம‌னித‌னாய் நான்
ப‌திந்திட‌வே பாதை நெய்தாய்
அம்மா... என் அம்மா...

க‌டைசிவ‌ரை உன் அருகே
நானிருப்பேன்
அம்மா... என் அம்மா...

உன் கால‌டியில்
மோட்ச‌ம் க‌ண்டேன்
நான் வில‌கேன்
அம்மா... என் அம்மா...

                                                                                                                      நெப்போலிய‌ன்

2 comments:

மணிச்சுடர் said...

உதிரத்தை உருக்கிப் பாலூட்டி வளர்த்தாய்
உறங்கிட எனக்குத் தாலாட்டு இசைத்தாய்
உனக்குற்ற சுகமெல்லாம் எனக்குள்ளே புதைத்தாய்
உனக்கேதும் கைம்மாறு வருமென்றா நினைத்தாய்.

அம்மா எனும் சொல்லால் அதரத்தை அசைத்தாய்
அப்பா எனும்உறவை அறிமுகம்நீ செய்தாய்
அறிவினை ஊட்டிடும்முதல் ஆசானாய் இருந்தாய்
அரசாளும் பிள்ளையெனினும் அவர்க்கென்றும் நீயேதாய்

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_16.html) சென்று பார்க்கவும்... நன்றி...